மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட ஐவர் வாள்வெட்டுத் தாக்குதலில் காயம்!
இரு குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுத் தாக்குதலில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.என்.பி.பெரேரா உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொல்லிகொடவில் உள்ள பெரேராவின் வீட்டில் நேற்று (30) நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்கியவர்களைக் கண்டால் அடையாளம் காண முடியும் என்றும் முறைப்பாட்டை பதிவு செய்த பெண் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
No comments