மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு மரணித்தவர் ஆவார்.
மூளைக்காய்ச்சல் உறுதி
அண்மையில் திடீரென சுகவீனமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் உயிரியல் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையிலேயே கைதிகளுக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மைக்காலமாக நாட்டில் சிறைச்சாலைக் கைதிகள் உயிரிழக்கின்றமை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments