Vettri

Breaking News

இடியுடன் கூடிய மழை பெய்யும்!!




 வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம்எதிர்வுக் கூறியுள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Today Weather Alert To Sri Lanka

No comments