Vettri

Breaking News

கதிர்காமம் ஆலயத்தில் தங்கம் மாயம் : பிரதான பூசகர் சிஐடியில் சரண்!





 கதிர்காமம் ஆலயத்தில் தங்கம்  காணாமல்போன சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகரான  சோமிபால டி ரத்நாயக்க மற்றும் மேற்படி ஆலயத்தின் பாதுகாவலரான சமன் பிரியந்த ஆகியோர் வீடுகளை விட்டு வெளியேறியதாக அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே  இரு சந்தேக நபர்களில் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகரான சோமிபால டி ரத்நாயக்கவே பொலிஸில் சரணடைந்துள்ளார்.

No comments