ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைபோன இலங்கை வீரர்!!
2024 இற்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில்இலங்கை கிரிக்கெட் வீரர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக நுவன் துஷார பதிவாகியுள்ளார்.
குறித்த வீரர், இம்முறை ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் துஷாரா 4.8 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷன் மதுஷங்க மும்பை இந்தியன்ஸ் அணியால் 4.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments