மழையுடனான வானிலை குறைவடையும் !
நிலவும் மழையுடனான வானிலை இன்று(05) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல், வடக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மழையுடனான வானிலையினால் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவிற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
No comments