கொலை சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் கைது
அவுஸ்திரேலியாவின் கன்பரா மிருகக்காட்சி சாலையில் பெண் ஒருவரை கொலை செய்ததாக இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் கன்பரா மிருகக்காட்சிசாலையில் ஒன்றாக பணிபுரிந்து வந்தவர்களாக கூறப்படுகிறது.
குறித்த பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன் கொலையை செய்த நபரும் தன்னைத்தானே தாக்கி காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்நிலையில், காயம் காரணமாக தற்போது சந்தேகநபர் காவல்துறையினரின் பாதுகாப்பில் சிகிச்கை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஜூட் விஜேசிங்க என்ற 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மூடப்பட்ட மிருகக்காட்சிசாலை
அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட கத்தியும் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வன்முறை சம்பவத்தினால் கன்பரா மிருகக்காட்சி சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
No comments