விஜய் போல் கவின் திரை வாழ்க்கையை கணித்த எஸ்.ஏ. சந்திரசேகர்.. சொன்னது அப்படியே நடக்குதே
எஸ்.ஏ. சந்திரசேகர்
இன்று திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக தளபதி விஜய் இருக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் எஸ்.ஏ. சந்திரசேகர் தான்.
ஒரு தந்தையாக தனது மகனுக்கு என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்து இன்றை அவரை இந்திய திரையுலகை வியர்ந்துபார்க்கும் இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.
இவருடைய கணிப்பு அன்றே சரியாக இருந்துள்ளது. எப்படி விஜய்க்கு இவர் கணித்த கணிப்பு சரியாக இருந்தததோ அதே போல் வேறொரு நடிகரின் திரை வாழ்க்கை குறித்தும் எஸ்.ஏ.சி கணித்த ஒரு விஷயம் தற்போது நடந்து வருகிறது.
எஸ்.ஏ.சி கணிப்பு
அவர் வேறு யாருமில்லை நடிகர் கவின் தான். ஆம், கவினை முதன் முதலில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது எஸ்.ஏ. சந்திரசேகர், கவினின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார்.
அப்போது தனது மனைவி ஷோபாவிடம் 'இந்த பையன் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவான்' என கவின் குறித்து கூறியுள்ளார்.
அதே போல் சீரியலில் பட்டையை கிளப்பி வந்த கவின் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். விரைவில் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியது போலவே நடக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments