Vettri

Breaking News

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் தெரிவு ;இப்பதவியை வகிக்கும் முதலாவது தமிழர்!!




 மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் (18.12.2023) கொழும்பில் நடைபெற்றபோது நீதிபதி இளஞ்செழியன் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இவர் இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டிலும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு மீண்டும் கிடைத்துள்ள உயர் பதவி | President Of The Supreme Court Ilancheliyan Tamil

இந்நிலையில் இரண்டாவது தடவையாகவும் 2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


மேலும் இப்பதவியை வகிக்கும் முதலாவது தமிழரும் இவராவார்.

பொதுக்கூட்டத்தின் போது உபதலைவராக எஸ்.எச்.எம்.என்.லக்மாலி (S.H.M.N.Lakmali), செயலாளராக எச்.ஏ.டி.என். ஹேவாவாசம் (H.A.D.N. Hewawasam), பொருளாளராக கே.ஏ.டி.கே.ஜெயதிலக்க (K.A.T.K.Jayathilake) மற்றும் உப செயலாளராக டபிள்யூ.டி.விமலசிறி (W.D.Wimalasiri) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments