தம்பலகாமத்தில் முதலை கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்!!
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் மாடு மேய்க்க சென்ற இருவரில் ஒருவர் முதலை கடிக்கு இலக்காகி குறித்த ஆற்றில் காணமல் போயுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளானவர் சிப்பித்திடல் தம்பலகாமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய கே.சசிகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். அத்துடன், மாடு மேய்க்க சென்ற இருவரில் ஒருவரே இவ்வாறு முதலை கடிக்கு இலக்காகி ஊத்தவாய்க்கால் ஆற்றில் காணாமல் போயுள்ளதுடன் பொது மக்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments