Vettri

Breaking News

இரட்டைக் குழந்தைகளை விட்டுச் சென்ற தாய்!!





முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய், ஒன்பது நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதிவிட்டு, கடந்த 19ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

29 வயதுடைய அஹுங்கல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் பெண்ணே இவ்வாறு வெளியேறியுள்ளார். திருமணமாகி சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரட்டைக் குழந்தைகள் பிரசவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இரட்டைக் குழந்தைகளின் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.

குறித்த பென வீட்டை விட்டு வெளியே சென்றபோது, ​​மொபைல் போனைத்தவிர வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“என்னால் வலியைத் தாங்க முடியவில்லை, அதனால் இரண்டு குழந்தைகளை கவனித்துக்கொள்ளமுடியவில்லை அதனால் நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன்” என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இருப்பினும், இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பதும், ஒன்பது நாட்களாக உணவு வழங்குவதும் கடினமான பணியாக உள்ளதால், இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் தமக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் உற்பட உறவினர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


 

No comments