Vettri

Breaking News

பெரிய வெங்காய உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!




 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையில், கடந்த ஆண்டு (2022) இலங்கையில் பெரிய வெங்காயத்தின் உற்பத்தியானது கடந்த வருடத்துடன் (2021) 17,799 மெட்ரிக் தொன்கள் வரை ஒப்பிடுகையில் 73 வீதத்தால் கணிசமாகக் குறைந்துள்ளது. 

இந்நிலைமை காரணமாக கடந்த வருடம் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி 2.5 வீதத்தால் அதிகரித்து 263,781 மெட்ரிக் தொன்களாக காணப்படுவதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு (2022) 2220.4 ஹெக்டேர் பரப்பளவில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டது. 


2021ம் ஆண்டு 3270 ஹெக்டேர் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டது. நாட்டில் பிரதானமாக பெரிய வெங்காயத்தை பயிரிடும் மாத்தளை மாவட்டத்தில், பெரிய வெங்காய அறுவடை 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 இளவேனிற்காலத்தில் 4994.7 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளது. 

பெரிய வெங்காய உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல் | Big Onion Production Down Sri Lanka

2021 ஆம் ஆண்டில், பெரிய வெங்காய அறுவடை 39096 மெட்ரிக் தொன்களாக இருந்தது, 2022 ஆம் ஆண்டில், அளவு 34101.3 மெட்ரிக் தொன் குறைந்துள்ளது.


உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருட்கள் போதிய அளவில் வழங்கப்படாதது, உயர்தர விதைகளைப் பயன்படுத்தாதது, மண் பயிர் மேலாண்மை தொடர்பான நல்ல நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதது ஆகியவை வெங்காய உற்பத்தி குறைவதற்கு முக்கிய காரணிகளாகும்.


பெரிய வெங்காயம் முக்கியமாக அனுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் மகாவலி வலயங்களில் பயிரிடப்படுவதுடன், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சிறிய அளவிலான பெரிய வெங்காயம் பயிரிடப்படுகிறது.

No comments