Vettri

Breaking News

மட்டக்களப்பு வாவியில் வலையில் சிக்கிய சடலம்!




 மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று(14) இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்தொழிலாளர் ஒருவரின் வலையிலேயே சடலம் சிக்கியுள்ளது.

மேலதிக விசாரணை

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பு வாவியில் வலையில் சிக்கிய சடலம்! | A Man S Body Was Recovered From Batticaloa Wavi

சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments