Vettri

Breaking News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நிலையங்கள் அம்பாறையிலா?





 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான பயிற்சி நிலையங்களை யாழ்ப்பாணம், அம்பாறை மாவட்டங்களிலும் ஹோமாகமயிலும் நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அவர்கள் செல்கின்ற நாடுகளுக்கு ஏற்றவாறான, துரிதமான விசேட பயிற்சி வேலைத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் நடத்தப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டிடங்களில் குறைந்தளவு வசதிகளுடன் இந்த பயிற்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உரிய வசதிகளுடன் கூடிய பயிற்சி நிலையங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான காணிகளில் அமைப்பதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் யோசனை சமர்ப்பித்திருந்தார்.

No comments