Vettri

Breaking News

மாத்தறை சிறைச்சாலையில் மர்மநோய்த்தொற்று;கைதியொருவர் உயிரிழப்பு!!




 மாத்தறை சிறைச்சாலையில் மர்மநோய்த்தொற்றுக்குள்ளான மற்றுமொரு கைதியும் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்தார். மாத்தறை சிறைச்சாலையில் இருந்த கைதிகளுக்கிடையே பரவிய மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பலர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நோய் தாக்கம் காரணமாக ஏற்கனவே


கைதியொருவர் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதான கைதி ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் பரவியது மூளை காய்ச்சல் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments