ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடும் பொறுப்பு வடிவேல் சுரேஷுக்கு இருக்கும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து வடிவேல் சுரேஷை கட்சி நீக்கியது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது வடிவேல் சுரேஷ் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
No comments