Vettri

Breaking News

அஸ்வெசும உதவித்தொகை இன்று முதல் பயனாளர்களின் கணக்குகளில்: நிதி அமைச்சின் அறிவிப்பு !




 அஸ்வெசும நலன்புரி உதவித்தொகை இன்று முதல் பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையை பெற தகுதியுடைய 14 இலட்சத்து 6 ஆயிரத்து 932 குடும்பங்களுக்கான கொடுப்பனவே வங்கிகளில் வைப்பிலிடப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்துக்கான 8 ஆயிரத்து 775 மில்லியன் ரூபா நிதி தற்போது வங்கிகளில் வைப்பிலிடப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


No comments