பராமரிக்கப்பட்டு வந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடுவிப்பு!!
புத்தளம் – கண்டக்குழி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்த ஆமைக் குஞ்சுகள் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நேற்று(20) கடலில் விடுவிக்கப்பட்டன.
கண்டக்குழி கடற்கரையில் இடப்படும் முட்டைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பாதுகாப்பாக சேகரித்து ஆமைக் குஞ்சுகளாக மாறிய பின்னர் கடற்கரையில் விடுவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று(20) மாலை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆமை பராமரிப்பு நிலையத்திற்குச் சென்று குறித்த ஆமைக் குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விடுவித்தனர்.
குறித்த கடலாமைகள் அரியவகையான (Olive Ridley) மஞ்சள் நிற சிற்றாமை வகையைச் சார்ந்தவை என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
No comments