Vettri

Breaking News

மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டன!!




 தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை ரயில் மார்க்கத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மண் மேட்டை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தியத்தலாவை மற்றும் ஹப்புத்தளைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் ரயில்கள் இன்று தாமதமாகும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


No comments