Vettri

Breaking News

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் வேலை நிறுத்தம்!!




 நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.


இதேவேளை, மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளர் காவு வண்டி சாரதிகள் நாளை (19) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் வனவிலங்கு அதிகாரிகள் வேலை நிறுத்தம் | Nationwide Wildlife Officers Strike



மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளையும் நாளை மறுதினமும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண நோயாளர் காவு வண்டி மற்றும் போக்குவரத்து சாரதிகள் சங்கத்தின் தலைவர் சம்பத் கருணாரத்ன தெரிவித்தார்.

No comments