Vettri

Breaking News

கல்முனையில் நிகழ்ந்த நூதன திருட்டு : நகைகளை அபகரித்த இந்தியர்கள்




 தனியார் உணவகமொன்றில் காசாளராக இருக்கும் உணவக உரிமையாளரின் மனைவியிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி மிகவும் நூதனமான முறையில் சுமார் 8 பவுணுக்கும் அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் (20) இந்த திருட்டு இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திருட்டு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

"சம்பவ தினத்தன்று இரண்டு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர்.

இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ தினத்தன்று (20) இரவு அந்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கல்முனையில் நிகழ்ந்த நூதன திருட்டு : நகைகளை அபகரித்த இந்தியர்கள் | Kalmunai Robbery Ndians Stole Jewels

இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்கலாக ஏனைய நகைகளை இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி ஒரு மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.

இவ்வாறு பூஜை இடம்பெற்றுக்கொண்டு இருந்தபோது இடை நடுவில்பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அந்தப்பெண்ணிடம் வேண்டியுள்ளனர்.


உடனடியாக அந்தத்தேசிக்காயைப் பெற்ற அந்தப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி இரண்டு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை தம்வசம் எடுத்து கொண்டு அந்தப் பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.

கல்முனையில் நிகழ்ந்த நூதன திருட்டு : நகைகளை அபகரித்த இந்தியர்கள் | Kalmunai Robbery Ndians Stole Jewels

பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார், இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது, உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை காவல் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு செய்துள்ளமை" குறிப்பிடத்தக்கது.  

No comments