மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை!!
அனுராதபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அனுராதபுரம் முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள், அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 400 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments