பெரமுனவின் தலைவராக மீண்டும் மஹிந்த !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டில் முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தார்.
அந்த யோசனையை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதிப்படுத்தினார்.
அதன் பிறகு, பேரவையில் இருந்த கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு பொது மாநாட்டில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஏனைய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
No comments