சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1,586 குடும்பங்களைச் சேர்ந்த 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், 341 குடும்பங்களைச் சேர்ந்த 1,039 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 பாடசாலைகளதும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 பாடசாலைகளதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றைய தினம் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments