பாராளுமன்ற த்தின் மின்கட்டணம் ஆறு மாதங்களுக்கு ஏழு கோடியை கடந்தது !
பாராளுமன்றத்திற்கு 12 மின் இணைப்புகள் உள்ளதாகவும் கடந்த மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை பாராளுமன்ற வளாகத்திற்கான மொத்த மின் கட்டணம் ஏழு கோடியே முப்பத்தொரு இலட்சம் ரூபா எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பாராளுமன்ற வளாகத்தின் மின்கட்டணம் ஒரு கோடியே இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் ரூபாயாகும் .
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கடந்த மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான ஆறு மாதங்களுக்கான மொத்த மின் கட்டணம் 24 இலட்சம் ரூபாவாகும்.
இந்த மின் இணைப்புகளுக்கு மேலதிகமாக, மாதிவெல சபை உறுப்பினர் வீட்டுத் தொகுதிக்கு 120 மின் இணைப்புகளும், ஜயவதனகம உத்தியோகபூர்வ குடியிருப்புக்கு 15 மின் இணைப்புகளும் உள்ளன.
மாதிவெல குடியிருப்பில் தற்போது 109 எம்.பி.க்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் தொடர்பான மின்கட்டணத்தை பாராளுமன்றம் செலுத்தி அதன்பின் எம்.பி.க்களின் சம்பளத்தில் அறவீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments