கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிப்பு!!!
இலங்கையில் சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை இன்று (12) முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 30 முதல் 50 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
1,250 ரூபாய் வரை
எனவே1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சி இன்று முதல் 1,250 ரூபாய்க்கு உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பல கோழிப் பண்ணை உரிமையாளர்கள் இந்த தொகையை நேற்று (11) அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முட்டையின் விலையும் 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் அதற்கு மேலதிகமாக விற்பனை செய்யப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments