Vettri

Breaking News

வளத்தாப்பட்டியில் இரு பாடசாலைகளுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!!




A







நூருல் ஹுதா உமர் 


இணைந்த கரங்கள் அமைப்பினால் பழைய வளத்தாப்பிட்டி கமு/சது தமிழ் கலவன் பாடசாலை மற்றும் புதிய வளத்தாப்பிட்டி கமு/சது/ஸ்ரீ நாவலர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் உள்ள அதி கஸ்ட  குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலையின் அதிபர் க.கணேஸ் தலைமையில் இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், சி. காந்தன், ஆகியோரும் பழைய வளத்தாபிட்டி பாடசாலையின் அதிபர் திருமதி. பு. புஸ்பராணி மற்றும் இலங்கை விரிட்டிஸ் ஆங்கில கல்லூரி பணிப்பாளர் எஸ்.வினோகாந்த், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் ரீ.காந்தன், பாடசாலை ஆசிரியர்களான வீ. கௌசல்யா, என். திவியோகராஜா, கே. நிலுஜா உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments