இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி தடை நீடிப்பு !!
வெங்காய ஏற்றுமதிக்கான தடையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியா நீடித்துள்ள நிலையில், இலங்கை இறக்குமதியாளர்கள் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கலில் உள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்தியா இவ்வாறு செய்துள்ளது. இலங்கை அதன் வெங்காயத் தேவைக்காக முக்கியமாக இந்தியாவையே சார்ந்துள்ளது, ஏனெனில் உள்ளூர் உற்பத்தி சிறியளவில் உள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், இறக்குமதியாளர்கள் மாற்று வழங்குநர்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். இலங்கை மாதாந்தம் சுமார் 20,000 தொன் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது.
“இது ஒரு அழுகும் பொருள். எனவே, வாராந்த ஏற்றுமதிக்கு நாங்கள் முன்பதிவு செய்கிறோம். விலைகள் மிகவும் அதிகம் என்பதால், வெவ்வேறு சந்தைகளைப் பார்ப்பது எங்களுக்கு சவாலாக உள்ளது,” என்றார்.
உள்ளூர் சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்று ரூ.300 ஆக உயர்ந்துள்ளது.
No comments