தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!
பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொழிற்சங்கங்கத்தினர் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் என அஞ்சல் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நுவரெலியா மற்றும் கண்டியில் உள்ள அஞ்சல் நிலையங்களை விற்பனை செய்வதற்கு எதிராகவும், 20 ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும் அஞ்சல் தொழிற்சங்கத்தினர் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக குறித்த தொழிற்சங்கத்தினர் அஞ்சல் நிலையங்களை விற்பனை செய்யும் தீர்மானத்துக்கு எதிராக 2 நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், தற்போது முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பில் அனைத்து அஞ்சல் ஊழியர்களும் இணைந்துகொண்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரித்துள்ளார்.
No comments