யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ரணில்! முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ரணில் விக்ரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர்ப் பிரச்சினை
இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான முக்கிய அறிவிப்பினை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கொண்டுவரப்பட்ட பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கிரிக்கெட் போட்டி
இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் தற்போது இத்திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இதனையடுத்து ரணில் விக்ரமசிங்க கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பிரசன்னமாகவுள்ளார்.
No comments