Vettri

Breaking News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா?





 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமிக்கும் செய்திகளை மறுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை பெயரிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின .

இதுதொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த செய்தியை மறுத்துள்ளதுடன், கட்சியினால் அத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

அத்தகைய முடிவுகளை எடுக்க கட்சியின் செயற்குழு கூட்டப்பட வேண்டும் என்றும், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 15) முதல் அந்தக் குழு கூடவில்லை என்றும் SLPP மேலும் கூறியுள்ளது .

No comments