Vettri

Breaking News

இலங்கையில் மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம்




 இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவ்வாறு வாய்ப் புற்றுநோய் ஏற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறான உணவுப் பழக்கவழக்கம் 

மாணவர்களின் வாய்பகுதியைச் சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் அது வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் மாணவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் | Risk Of Oral Cancer In Students Doctors Alert

விற்பனை செய்யப்படும் துரித உணவுகள் மற்றும் பொதியிடப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணியாற்றும் விசேட வைத்தியர் ஏ.எச்.பி.எஸ்.கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் அறிந்து அதற்கு ஏற்றாற் போல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments