குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது-பதில் பொலிஸ் அதிபர் தேஷபந்து தென்னக்கோன்
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது. அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என
பதில் பொலிஸ் அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சகலரையும் இந்த வாரத்துக்குள் சிறையில் அடைக்க வேண்டும். என்னிடம் பெயர் பட்டியல் இருக்கிறது. அவ்வாறு செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதோடு நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நாட்டிலிருந்து ஒழிக்க அவ்வாறு செய்ய முடியாது என்பதாலேயே அவ்வாறு செய்கிறோம். பாடசாலைகளுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்ய எவரும் செல்ல முடியாது.
பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் நல்ல வழியில் அல்லது கெட்ட வழியில் அதனை தடுப்பதற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம புறங்களில் வெள்ளை நிற ஆடை அணிந்திருக்கும் பலரே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை கைது செய்ய முடியாது என பொலிஸார் கூறுகின்றனர். அவர்கள் சமூகத்தில் பெரிய பொறுப்புகளிலும், சமூக செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை என கூறுகின்றனர்.
பொலிஸாருக்கு முடியவில்லை எனில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கூறுங்கள். அது முடியாமல் போனால் என்னுடைய வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறையிடுங்கள். நாம் நடவடிக்கை எடுப்போம். எதிர்காலத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சுமார் 1091 பேருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என்றார்.
No comments