தந்தை பணம் கொடுக்காததால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு !
யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளளார். நேற்று சனிக்கிழமை (30) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த இளைஞன், தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். தந்தை பணம் கொடுக்க மறுத்த காரணத்தால் குறித்த இளைஞன் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments