அதிகரிக்கவுள்ள முச்சக்கரவண்டி கட்டணம் : புதிய அறிவிப்பால் பரபரப்பு
ஜனவரி மாதம் முதல் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (29) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கதின் தலைவர் லலித் தர்மசேகர மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பெட்ரோல் விலை கூடுமானால்
"அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் பெருமதி சேர் வரி 18% ஆக அதிகரிப்பதனால், பெட்ரோல் விலை கூடுமானால் முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்படும்.
மேலும், பெட்ரோல் விலை 50 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கட்டண திருத்தங்கள்
அவ்வாறு ஜனவரி மாதம் முதல் 50 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்பட்டால், எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணமும் அதிகரிக்கும்.
கடந்த காலங்களில் அரசாங்கம் பெற்றோல் விலையை உயர்த்திய சந்தர்ப்பங்களில் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் இம்முறை அவ்வாறு இருக்க முடியாது, விலையேற்றத்திற்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்." என்றார்.
இந்நிலையில், பயணிகள் உயர்த்தப்பட்ட விலையை எவ்வாறு தாங்குவது என்பதில் சிக்கல் உள்ளது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments