Vettri

Breaking News

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் இவ்வாண்டு 26 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது – அமைச்சர்!!





 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA ) 2022 இல் நான்கு பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்ட நிலையில், 2023 இல் 26 பில்லியன் ரூபா வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவது, நவீன தகவல் தொடர்பு சாதனங்கள், ரேடார் போன்றவற்றை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும், அதற்கமைவாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவரகத்தின் (JICA) சலுகைக் கடனுடன் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments