பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது
பேலியகொடை , துங்கல்பிட்டிய , கல்கிஸை , கொழும்பு போன்ற பல்வேறு பிரதேசங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 50, 34, 35, 37, 48, 35 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பேலியகொடையில் 12 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் துங்கல்பிட்டியவில் 30 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கல்கிஸை பிரதேசத்தில் 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கொழும்பில் 5 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments