வெங்கட் பிரபுவிற்கு விஜய்க்கும் இடையே பிரச்சனையா.. தளபதி 68 படத்தில் புதிய சர்ச்சை
தளபதி 68
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்.
சினேகா, லைலா, ஜெயராம், மோகன், பிரபு தேவா, பிரஷாந்த், யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு G.O.A.T என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பில் பிரச்சனையா
இந்நிலையில், விறுவிறுப்பாக நடந்து வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பில் விஜய்க்கும், வெங்கட் பிரபுவிற்கும் இடையே சலசப்பு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
நடிகர் விஜய்க்கு இன்று என்ன காட்சி எடுக்க போகிறார்களோ, அந்த காட்சியின் சீன் பேப்பரை அதற்கு முத்தன நாளே விஜய்யிடம் கொடுக்க வேண்டுமாம். ஆனால், வெங்கட் பிரபு அப்படி செய்யாமல்.
ஒரு காட்சியை எடுக்கப்போகும் சமயத்தில் சில நிமிடங்களுக்கு முன்பு வரை, அந்த காட்சியில் சிறு சிறு விஷயங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறாராம். இதனால் வெங்கட் பிரபு மீது விஜய் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments