Vettri

Breaking News

களனி பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!!





 களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலந்தி டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவத்தை எதிர்கொண்ட பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய, விசேட பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments