சிகிரியாவின் சூரிய உதயத்தை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதன் மூலம் நாளாந்தம் 3,000 டொலர்கள் கிடைக்கும்
சிகிரியாவில் சூரிய உதயத்தை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதன் மூலம் நாளொன்றுக்கு மூவாயிரம் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடனில் சுமையாக இருந்த மத்திய கலாசார நிதியத்தின் டொலர் 614% அதிகரித்துள்ளதாகவும், சிகிரியாவில் சூரிய உதயத்தின் அழகைக் காண வெளிநாட்டவர்களுக்கு.
சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் மூவாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் ஈட்டப்படுவதாகவும் நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கூடிய சமய விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தின் போது, சிகிரியாவைச் சுற்றியுள்ள இடங்கள் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரக்கூடிய துறைகளாக கண்டறியப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments