250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் சாத்தியம்
நாட்டில் எதிர்காலத்தில் 250 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என சிவில் உரிமைகள் தொடர்பான சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் காலப்பகுதியில் தரகு பணத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அத்தியாவசிய மருந்துகளுக்கு பதிலாக அத்தியாவசியமற்ற பல மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட தரப்பினரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
அதேநேரம் தரமற்ற இம்யூனோ குளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் என கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த நபரே, அந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரா? என்ற கேள்வி நிலவுகிறது.குறித்த தடுப்பூசியில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான இம்யூனோ குளோபுலின் காணப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இதேவேளை இம்யூனோ குளோபுலின் மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் ஜனக சந்திரகுப்த இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments