Vettri

Breaking News

24 மணித்தியாலங்களில் 1,422 சந்தேக நபர்கள் கைது!




 நாடளாவிய ரீதியில் நேற்று (27) முதல் இன்று (28) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,422 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

35 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 3 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 37 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 73 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயின் 347 கிராம்
ஐஸ்  827 கிராம்
கஞ்சா 5 கிலோ 475 கிராம்
கஞ்சா செடிகள் 6,691
மாவா 208 கிராம்
போதை மாத்திரைகள் 3,574




No comments