Vettri

Breaking News

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – 2,166 பேர் கைது!!





 நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், 2,166 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்புகளில் 1.3 கிலோகிராம் ஹெரோயின், 566 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், 7 கிலோகிராம் கஞ்சா மற்றும் 1,075 கஞ்சா செடிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments