ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாடு இன்று!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2ஆவது தேசிய மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்த மாநாடு இன்று(15) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த மாநாட்டின் ஏற்பாடுகள் தொடர்பில், கண்காணிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் எதிர்கால செயற்பாடு மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் இதன்போது. அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
No comments