டிசம்பரில் இதுவரை 1800 இற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு!!
மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கண்டி மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்திற்கு நவம்பர் 22 முதல் டிசம்பர் 22 வரை “டெங்கு தடுப்பு மாதம்” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,322 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் இதுவரை 1,839 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயினால் வருடத்தில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
No comments