Vettri

Breaking News

காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலையில் 17மாணவர்களுக்கு 9A சித்தி: மீண்டும் சாதனை!




 இம்முறையும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை மீண்டும் சாதனை!


17 மாணவிகள் 9A விசேட சித்திகள்.

இம் முறை நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை இம் முறையும் மாகாண மட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.


கல்முனைக் கல்வி வலயத்தின் காரைதீவு கோட்டத்தினை உள்ளடக்கிய பாடசாலைகளில் இவ் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் படி 63 மாணவர்கள் தோற்றி காரைதீவு கமு/கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை மாணவிகளில் 17 மாணவிகள் விசேட சித்திகளைப் பெற்று  பாடசாலையை  மாகாண மட்டத்தில் வரலாற்றுச் சாதனையை நிலைபெற வைத்துள்ளனர்.


இச் செயற்பாட்டிற்கு களம் அமைத்த கல்லூரியின் முதல்வர் திரு.ஆர்.ரகுபதி, பிரதி முதல்வர் திரு.எஸ்.ரவீந்திரன், பகுதி தலைவர், வகுப்பு ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், EPSI இணைப்பாளர், ஆசிரியர் ஆலோசர்கள், பிரதி/உதவி கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


1.R.Moshara

2.P.Lihashini

3.E.Yuneshika

4.D.A.Dilugshini

5.K.Kisomida

6.J.Hamshika

7.A.Thomitha

8.K.Tharnika

9.P.Vivitha

10.S.Laxsanya

11.E.Pawya

12.U.Senojika

13.S.Thanoshika

14.U.Shanusika

15.V.Menaja

16.T.Sathuska

17.V.Piranuka


மற்றும் 05 மாணவர்கள் 08A,01B சித்திகளையும் பெற்றுள்ளனர்.

S.Dishaniya

N.Sathuvarshi

K.Divanuja

M.Pemika

N.Kishani


அத்தடன் 07 மாணவர்கள் 07A விசேட சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments