கல்முனை சீர்திருத்த பாடசாலையில் 15 வயது சிறுவன் மர்மமான முறையில் மரணம்!!!
கல்முனை சீர்திருத்த பாடசாலையில் 15 வயது சிறுவன் மர்மமான முறையில்மரணம்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவிப்பு i
மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலை கிழக்கு மாகாணம் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் 17 ஆம் திகதி கல்முனை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் புதன்கிழமை (29.112023. அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக சிறுவனின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவரின் தகப்பனார் தெரிவிக்கின்றார்.
சிறுவனின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுவனுடைய மரணம் தொடர்பான விசாரணைகளையும் சட்ட வைத்திய அறிக்கையையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும் முன் வைப்பதாகவும் மரணம் அடைந்தவரின் தந்தை தெரிவிக்கின்றார்.
மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்பத்தினர் தங்களது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள் யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் தங்களது பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments