Vettri

Breaking News

சதொச நிறுவனத்திற்கு 10 மில்லியன் முட்டைகள்- அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!!




 நாளை திங்கட்கிழமை (18) சதொச நிறுவனத்திற்கு 10 மில்லியன் முட்டைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக


இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் உறுதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகளை இவ்வாறு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்துக்கு தேவையான 15 மில்லியன் முட்டைகள் நாளை நாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் குறித்த
பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments