Vettri

Breaking News

எது மாறுனாலும் இந்த Vibe மாறாது.. தொடர்ந்து ஹிட் அடிக்கும் காவாலா




 

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் ‘ஜெயிலர்’. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ஒகஸ்ட் 10-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

No comments