PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு !
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்(PHI) சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மற்றும் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரவித்துள்ளார்.
போக்குவரத்து கொடுப்பனவை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கடந்த மாதம் 23ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
எவ்வாறாயினும் தமக்கான தீர்வுகள் உரியவகையில் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
No comments